Tuesday, February 4, 2014

படித்ததில் பிடித்தது.... உலகம் யாவையும்


இலங்கை ஜெயராஜ் அவர்களின்  "உலகம் யாவையும்" எனும் நூலில் வாசித்த குறிப்பை என் சொந்த மொழி நடையில் உங்களுக்காக.

தமிழரில் இலக்கியம் என்பது மிகச் சிறந்த ஒன்று... 
இலக்கு + இயம் = மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான இலக்கினை இயம்புவது (சொல்வது)
இதில் தலைசிறந்ததாக விளங்குவது இராம காதை என்னும் "கம்பராமாயணம்"
அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்குமே நமது காப்பியங்களிலும் இதிகாசங்களிலும் வலியுறுத்தபடுவன....
அறம் இருவகைப்படும் மூலஅறம் மற்றொன்று சார்புஅறம் 
மூலஅறம் என்பது எந்த நாட்டிற்க்கும் எந்த மக்களுக்கும் பொதுவானவையாகும்... மற்றையது இடம் கண்டு வேறுபாடும்..
கம்பன் கடவுள் வாழ்த்து எழுத தலைப்படும் போது அவன் சிந்தித்திருக்க வேண்டும்... உலகினை படைத்த இறைவனை நாம் பாடுங்கால் அது இறைவனை குறிக்க வேண்டும்.....
இறைவன் எத்தகைய தன்மையன் என்று கம்பர் ஆராய்ந்து இருகக்கூடும்... 
இறைவன் "உளவாதல்" "நிலைபெறுதல்" "நீங்குதல்" என்னும் தன்மை உடையவன் அதாவது உருவாகுதல், நிலைபெற்று பின்பு தன்னை ஒடுக்கி (அழித்து) கொள்பவன்....
இந்த மூன்று தன்மையில் இறைவனை நாம் இரண்டாவது நிலையில் அதாவது நிலைபெருதலில் தான் உணர முடியும் என்று கம்பர் எண்ணினார் போலும்... இந்த மூன்று நிலையினையும் விளக்கும் சொல் ஒன்று உள்ளது.... 
இந்த உலகம் தோன்ற ஆதி சப்தம் என்கிறது ஆன்மிகம் அறிவியலும் ஒலியிலிருந்து தான் இந்த உலகமும் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர்... அதை தான் நாம் ஓம்காரம் என்கிறோம்... ஓம் என்பது அகார (அ) உகார (உ) மகார (ம்) சேர்க்கை... அ + உ + ம் = அஉம் என்பதே ஓம் என்கிறோம்... இதில் ஆகாரம் என்பது ஆக்கம் (தோன்றல்), உகாரம் (நிலைபெறுதல்) மகாரம் (முடிதல்). நாம் அ எனும் போது சொல் பிறக்கின்றது... எல்லா சொற்களுக்கும் பிறப்பு அ தான் அதனால் தான் குழந்தை முதல் சொல்லாக அம்மா என சொல்கின்றது... உகாரம் என்பது நிலைபெறுதல்... ம் என்பது ஒரு சொல்லின் முடிவு... இதனால் தான் கம்பர் இறைவனின் நிலை பெறுதலை உணர்த்த உகாரத்தில் கடவுள் வாழ்த்தினை செய்கின்றார்.... 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)

Wednesday, August 14, 2013

இன்னும் காதலனாக...

உன் நினைவுகள் நித்தம் 
நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன 
என் பக்கங்களில் 
கவிதைகளாக..
உன் மௌனத்தை - நான் 
மணந்து கொண்டே இருக்கிறேன் 
கணவனாக...
உன் நினைவால் 
இறந்துகொண்டே இருக்கிறேன் 
இன்னும் காதலனாக...  சௌந்தர்

Friday, April 13, 2012

என்றோ
எனக்காக பிறந்துவிட்டவள்!!
என் சொற்களையும் இதழ்களையும் 
இனிக்கவைத்தவள்!!
கன்னிக்காரிகையாய் இருப்பினும்- என் 
எண்ணத்தூரிகைக்கு வண்ணம்தந்தவள்!!!
என்னைத் தன் மடிமீது கிடத்தி வாசனை தந்தவள்!!
முதுமையின் பெருமை பெற்றிருப்பினும்...
புதுமையின் பொழிவினைப் போற்றுபவள்!!
அவள் தான் நான் ஸ்பரிசித்த முதல் பெண்!!
என்னை ஸ்பரிசித்த முதல் காதலி!!!
என் எண்ணக்கலவைகளுக்கு பெரும் சின்னமாய்!!
என் சிந்தனைக்கூடத்தில் 
கருத்துக்கலவியில்- இங்கு
கவிதைகளாய் அவள்...
தமிழ்!!!  - சௌந்தர் 

Wednesday, April 27, 2011

என் சுவாசச் சொல்லிற்கு...

இங்கே நான்...
உன் நினைவுகள் தான் என்னைத் தாங்கிகொண்டிருகின்றது!!!
நான் துங்கும் பொது...
என் குழலை கோதி நீ கொடுத்த முத்தம்...
வீட்டில் என் கையால் நான் உணவு  உண்டதே இல்லை...
எனக்கு உணவு இட்ட உன்கைகள்...
கண்ணீர்துடைத்த உன் விரல்கள்...
அள்ளி அணைத்த அன்பு...
அம்மா என்னும் உன் பெயர் கூட சுவாசச் சொல்லாக இருப்பது எனக்கு வியப்பு தான்....
உன் பெயர் மட்டும் அல்ல...
நீயும் என் சுவாசம் தான்...
என்னை காதல் வாட்டவில்லை...
கண்ணீர் வாட்டவில்லை!!!
உன்னை காணாத பிரிவு....
உன் அணுக்கமும் ஸ்பரிசமும்  இல்லாத நாட்கள்...
நீ ஊட்டாத உணவு...
நீ கோதாத குழல்..
இவைகள் என்னை கொன்றுவிடுகின்றன....
என்னை நானே வெறுத்து விடுகிறேன்...
இங்கே நீ இல்ல விடினும்
அம்மா என்னும் உன் சுவாசச் சொல் தான் என்னை வாழவைக்கின்றது...
---சௌந்தர்